கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னனியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிப்பெற்றுள்ளது. இதன் மூலம் தாங்கள் ஆட்சியில் இருந்த கடைசி மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்து இருக்கிறது.
கேரள மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 140 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இடதுசாரி கூட்டணி 35 இடங்களை பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. பாஜக 3 இடங்களில் வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி தற்போது ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால், பொதுவாகவே நிலவும் ஆட்சியின் மீதான அதிருப்தி முதன்மையான காரணமாக இருந்திருக்கிறது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் போன்றவை முக்கிய காரணமாக இருந்தன. ஒருபுறம் மத்திய அரசு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இடையேயான மோதலும் அதே நேரம் காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய ஜனநாயக முன்னணி வலுவான தலைமையாக வளர்ந்து வந்ததும் இந்த் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் அதே நேரம் கேரள மாநிலத்தில் இவை எதிரெதிராக போட்டியிட்டன. இதனால் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதே காங்கிரஸ் கட்சியே பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. ராகுல் காந்தியும் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது மாநில சட்டமன்றத்தையும் கைப்பற்றியுள்ளது. தற்போது அமைய இருக்கும் புதிய அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பு, வளர்ச்சி, தனியார் முதலீடு போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.









