எம்.எஸ்.தோனி இல்லாத சிஎஸ்கேவை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா…? ஆனால் ஐபிஎல் 2026 சீசன் தொடங்கியதுமே அது நடக்கப் போகிறது.
ஐபிஎல் 2026 இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த சீசனில் விளையாட தயாராகி வந்த தோனி, காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளாராம். தற்பொழுதை நிலவரம்படி சிஎஸ்கேவின் முதல் ஐந்து போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த காயம் பெரிய பிரச்சினையல்ல என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும், தோனி இல்லாத முதல் சில போட்டிகள் சிஎஸ்கேவுக்கு பின்னடைவாக இருக்கும் என்பது உறுதி. அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருப்பார். ஏப்ரல் 18ஆம் தேதி Sunrisers Hyderabad அணிக்கு எதிரான போட்டியில்தான் இந்த சீசனில் தனது முதல் போட்டியை தோனி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சேப்பாக்கத்தில் நடந்த ROAR 2026 நிகழ்ச்சியில் கூட, சிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, “என்னுடைய ஃபிட்னஸ் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் அடுத்த ஆண்டு விளையாடலாமா இல்லையா என்று முடிவு செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தோனி தனது ஃபிட்னஸில் சற்று சிரமப்பட்டு வந்தர்.
இந்த சீசனில் சிஎஸ்கேவின் முக்கிய ஆல் ரவுண்டரான ஜடேஜா இல்லாவிட்டாலும், அவரின் இடத்தை நிரப்ப பல திறமையான வீரர்களை அணி எடுத்துள்ளது சிஎஸ்கே. டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் அணியின் பிரச்சனையை சரி செய்வார் என்றும், மிடில் ஆர்டரில் பிரஷாந்த் வீரர் போன்றவர்கள் இந்த ஆண்டில் சிஎஸ்கே டிமில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சீசனே தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்கனவே உருவாகியுள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டியுடன் அவர் ஓய்வு அறிவிக்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இதனால், இந்த சீசனில் தோனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.








