BREAKING

பொது

ஹோர்முஸ் நீரிணையை கடக்க கட்டணம்… ஈரானின் புதிய திட்டம்!

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவி வரும் நிலையில்,ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையின் வழியாக உலகின் சுமார் 20% எண்ணெய் வர்தகம் நடக்கிறது.போர் தீவிரமடைந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் வழியாக சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், நீரிணையின் இருபக்கமும் கப்பல்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதற்கிடையே, வளைகுடா நாடுகளை எரிசக்தி தேவைக்காக சார்ந்து இருந்த இந்தியா உட்பட பல நாடுகளில் எரிசக்தி சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்து வரும் நிலையில், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து குறைந்த அளவில் நடந்து வருகின்றன. கடுமையான நிபந்தனைகளுடன் சில கப்பல்கள் மட்டும் அப்பகுதியை கடந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் “Pay-and-Pass” முறையில் சில சட்ட பூர்வ மாற்றங்களை ஈரான் கொண்டுவரவிருக்கிறது. அதன்படி, முன்கூட்டியே ஈரானிடம் அனுமதி பெற்று, பயணத்திற்கான தொகையை கட்டிய பின்னர் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லமுடியும். இந்த முறையை சட்டப்பூர்வமாக மாற்றும் வேலையில் ஈரான் இறங்கியுள்ளது.

இந்த அணுகுமுறை சர்வதேச கடல் சட்டங்களுக்கு முரண்பட்டது. பொதுவாக, ஹோர்முஸ் போன்ற முக்கிய நீர்வழிகள் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமான பயணத்தை வழங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதுபோல கட்டணம் பெறுவதும், தேர்வு செய்யப்பட்ட கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவதும் விதிமுறை மீறல்கள் ஆகும்.

தற்போதைய சூழலில், “tier-based access system” எனப்படும் ஒரு புதிய முறையை ஈரான் உருவாகியுள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள், நட்பு நாடுகளாக கருதப்பட்டு, அந்நாட்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க சில நிபந்தனைகளுடன் ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.

மற்ற சில நாடுகளின் கப்பல்கள், தனித்தனியாக சோதனை செய்யப்பட்டு, அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதனால் தாமதங்கள், கூடுதல் செலவுகள் அந்நாடுகளுக்கு ஏற்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு தடை நீடிக்கிறது.

இந்நிலையில், இப்போது ஈரான் திட்டமிட்டுள்ள இந்த கட்டண முறை, எத்தகைய பொருளாதர சிக்கல்களை ஏற்படுத்த போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Posts