தமிழக முதல்வர் விஜய்யை கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனத்தின் தலைவர் ஜே. ரஃபிக் அகமது சந்தித்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், நாள்தோறும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று (மே 22) தலைமைச் செயலகத்தில் கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் (KICL) தலைவர் ஜே. ரஃபிக் அகமது, முதலமைச்சர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கோத்தாரி நிறுவனத்தின் ஆலோசகர் ஜெயந்த் முரளியும் உடனிருந்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வரும் முதலீடுகள் குறித்தும், தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையில் அந்த நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் ஜே. ரஃபிக் அகமது முதலமைச்சரிடம் விளக்கினார்.









