BREAKING

பிஸினஸ்

HDFC Bank தலைவர் திடீர் ராஜினாமா: காரணம் என்ன?

HDFC Bank வங்கியின் Part-time Chairman ஆக இருந்த Atanu Chakraborty திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது வங்கி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 2021 முதல் இந்த பொறுப்பில் இருந்த அவர், HDFC Ltd மற்றும் HDFC வங்கியின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்து, வங்கியின் வளர்ச்சிக்கு பங்களித்தவர் என குறிப்பிடப்படுகிறார்.

மார்ச் 15ஆம் தேதி அளித்த தனது ராஜினாமா கடிதத்தில், கடந்த சில ஆண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதையே காரணமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வங்கியின் செயல்பாடு, NPA பிரச்சனை அல்லது Reserve Bank of India விதிமுறை தொடர்பான எந்த பிரச்சனையும் இதற்கு காரணமல்ல என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவரின் விலகலுக்குப் பிறகு, இடைக்கால தலைவராக Keki Mistry நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டதால் பங்கு சந்தையில் சிறிய அதிர்வு ஏற்பட்டாலும், வங்கியின் அன்றாட சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என வங்கி தெரிவித்துள்ளது.

Related Posts