BREAKING

பிஸினஸ்பொது

“தமிழ்நாடு நிலையான கட்டமைப்பு கொண்டது” நம்பிக்கையூட்டும் KICL தலைவர்!

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் சூழல் நிலவினாலும், தொழில்துறை எவ்வித சிக்கலும் இல்லாமல் இயங்குமென KICL தலைவர் டாக்டர் ரஃபிக் அஹமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. புதிதாக ஒரு அரசு தமிழ்நாட்டில் அமையவிருக்கும் நிலையில், தொழில்துறையின் வளர்ச்சி குறித்து, KICL தலைவர் டாக்டர் ரஃபிக் அஹமது கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து எங்களிடமும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்கைத் தொடர்ச்சி இருந்து வருகிறது. மேலும், தொழில்துறை எந்த வகையிலும் பதிப்படையாத அளவில் செயல்பட வைக்கும் அளவிற்கு வலுவான நிர்வாக அமைப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால், தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து சர்வதேச நிறுவனங்கள் கவலைப்பட தேவையில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “கத்தாரின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் மேலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது, எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மட்டுமல்ல, இது தமிழ்நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தைவான், சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 சர்வதேச முதலீட்டாளர்களுடன் தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையில் “Phoenix Kothari Footwear Ltd” சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், உலக அளவில் சிறப்புவாய்ந்த ஐரோப்பிய ஃபேஷன் மற்றும் காலணி பிராண்டான Kickers நிறுவனத்தின் இந்தியா மற்றும் மேலும் 9 நாடுகளுக்கான உரிமையை KICL பெற்றுள்ளது.மேலும், Shiekh Falah Bin Jassim Al Thani, FJ Global நிறுவனத்தின் மூலம் KICL நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார்.

Related Posts