BREAKING

விளையாட்டு

Metropolitan Stock Exchange-யில் வர்த்தகமாகும் KICL நிறுவனம்

Kothari Industrial Corporation Limited (KICL) நிறுவனத்தின் பங்குகள் இனி இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான Metropolitan Stock Exchange of India Limited (MSE)-யில் வர்த்தகமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான MSE, ஏற்கனவே National Stock Exchange of India (NSE) மற்றும் BSE Limited (BSE)-யில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிறுவனங்களின் பங்குகளை “Permitted to Trade” பிரிவின் கீழ் MSE-யில் வர்த்தகம் செய்ய அனுமதித்து வருகிறது. அதன் அடிப்படையில், KICL நிறுவனத்தின் பங்குகளும் தற்போது MSE தளத்தில் வர்த்தகத்திற்கு அனுமதி பெற்றுள்ளன. இதன் மூலம், முதலீட்டாளர்கள் இனி KICL பங்குகளை MSE தளத்திலும் வாங்கவும் விற்கவும் முடியும்.

ஆனால், KICL நிறுவனம் MSE உடன் தனியாக “Listing Agreement” கையெழுத்திடவில்லை. இதனால், KICL நிறுவனம் MSE-யில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்ட நிறுவனமாக (Listed Company) கருதப்படாது.

மேலும், MSE-யில் தனியாக பட்டியலிடப்படாத காரணத்தால், KICL நிறுவனத்திற்கு கூடுதல் கட்டணங்கள், வருடாந்திர Listing Fees அல்லது புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் எதுவும் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் தொடர்ந்து வெற்றி கொடி நாட்டி வரும் வரும் Kothari Industrial Corporation Limited (KICL), பல ஆண்டுகளாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது. ஏற்கனவே KICL நிறுவனத்தின் பங்குகள் National Stock Exchange of India (NSE) மற்றும் BSE Limited (BSE)-யில் வர்த்தகமாகி வரும் நிலையில், தற்போது Metropolitan Stock Exchange of India Limited (MSE)-யிலும் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு KICL பங்குகளில் கூடுதல் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Related Posts