தவெக ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை வழங்குவது யார் என்பதில் போட்டி நடைபெற்று வருகிறது.
தவெகவின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி திமுவுடன் இணைந்து போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. மீதமுள்ள சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் திமுகவுடன் இருந்த மதசார்பற்ற முற்போக்கு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை மட்டும் நம்ப முடியாது. நாம் கொண்டுவர இருக்கும் சில சட்ட திட்டங்களை இவர்கள் எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் ஆதரவை திரும்ப பெறலாம். எனவே நமக்கு இன்னும் அதிகப்படியான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என கூறி வருகின்றனராம்.
இதனால் மற்றொரு பக்கம் அதிமுகவுடன் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவிலும் வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தவெகவுடன் கூட்டணி அமைத்தே ஆகவேண்டும் என அடம்பிடிக்கிறார்களாம். இதற்கு ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி மறுத்தால் கட்சியை உடைத்துவிட்டு தங்கள் சார்பு எம்.எல்.ஏக்களுடன் தவெகவுடன் செர்ந்து செல்ல தயாராக இருக்கிறார்களார்களாம்.
இந்த நிலையில் இதனை தடுக்க தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்க எடப்பாடி தயாராக இருக்கிறாராம். இதன் ஒரு பகுதியாக தவெக பொதுச்செயலாளரை நேரில் அழைத்து சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
தவெக உள்ளே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி ஆதரவும், வெளியே அதிமுகவின் நிபந்தனையற்ற ஆதரவும் கொண்டு ஆட்சியமைக்க இருக்கிறதாம்.









