BREAKING

பொது

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் படுதோல்வியை சந்தித்த நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இ-மெயில் மூலம் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அது இல்லாததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திமுகவின் முக்கிய புள்ளிகள், தமிழக வெற்றி கழகத்தின் புதுமுக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்தனர். திமுகவின் 32 அமைச்சர்கள் மற்றும் 1 சபாநாயகர் என மொத்தம் 33 முக்கிய வேட்பாளர்களில், 16 பேர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினின் தோல்வி யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது. முதல் சுற்று தொடங்கியதிலிருந்தே பின்னடைவை சந்தித்த ஸ்டாலின், இறுதியில் 7,731 வாக்குகள் வித்தியாசத்தில் வி. எஸ். பாபுவிடம் தோல்வியைத் தழுவினார்.

அதனைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

Related Posts