BREAKING

பொது

வீடியோ AI இல்லை.. ஆதாரங்களை அடுக்கும் தவெகவினர்!

அமமுக MLA காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கடிதம் எழுதி கையெழுத்திடுவது போன்ற வீடியோவை தவெகவினர் நேற்று சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். அதேசமயம் MLA காமராஜை காணவில்லை என, அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் தெரிவித்திருந்தார்.

பின்னர், பிறகு காணாமல் போனதாக சொல்லப்பட்ட MLA காமராஜ், கட்சித் தலைவர் தினகரனுடன் இணைந்து பேட்டி அளித்தார். நள்ளிரவில் கவர்னர் மாளிகைக்குச் சென்று தன் பெயரில் விஜய் கட்சியினர் வழங்கிய கடிதம் போலியானது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய , “அமமுக எம்எல்ஏ காமராஜர் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்? விஜயா? ஆனந்தா? செங்கோட்டையனா? ஒரிஜினல் ஆதரவு கடிதம் எங்கே, கவர்னரிடம் விஜய் அளித்த அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆராய வேண்டும். ஒரிஜினல் கடிதத்தை கேட்டதும் தவெக ஓடிவிட்டது. காமராஜ் காரில் இருந்தபடி ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுவது போல வெளியான வீடியோ போலியானது. வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அது AI வீடியோ இல்லை என்பதற்கான ஆதாரங்களை தவெகவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை AI DEDECTORS என்ற தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதன்படி இந்த வீடியோவை AI DEDECTORS மூலம் அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது,
ai generated – 0.00, deepfake – 0.00 என ஸ்கோர் கிடைத்துள்ளது. அந்த screenshot-களை பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல வீடியோ உண்மை என்றும், அது பாண்டிச்சேரில ‘neo green stay’ என்ற ஹோட்டல் முன் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். மேலும், MLA காமராஜ் கையில் கட்டியிருக்கும் பச்சை நிற கயிறை சுட்டிக்காட்டி, வீடியோவில் இருப்பது காமராஜ் தான் என தவெகவினர் திட்டவட்டமாக கூறிவருகின்றனர்.

Related Posts