BREAKING

பிஸினஸ்

NSE-ல் வர்த்தகத்தை தொடங்கிய KICL… பங்கு சந்தையில் மேலும் ஒரு மைல்கல்!

சென்னையை தலைமையகமாக கொண்ட Kothari Industrial Corporation Ltd. (KICL) நிறுவனம், National Stock Exchange of India (NSE)யில் தனது பங்குகளை வர்த்தகத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஏப்ரல் 20, 2026 முதல் ‘KOTIC’ என்ற வர்த்தக சின்னத்தில் KICL பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

SEBI-யின் (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 விதி 30க்கு இணங்க, KICL நிறுவனம் NSE-இன் Capital Market Segment-ல் வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த NSE பட்டியலிடல், KICL நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பங்குசந்தை பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நூற்றாண்டு பழமை வாய்ந்த KICL நிறுவனம் Dr.J.Rafiq Ahmed தலைமையிலான புதிய மேலாண்மையின் கீழ் வந்தது. இந்த புதிய தலைமையின் கீழ், நிறுவனம் தனது செயல்பாடுகளை புதுப்பித்து, Bombay Stock Exchange (BSE)-ல் மீண்டும் பட்டியலிடப்பட்டது.

மேலும், KICL நிறுவனம் உரம் (fertilizer), காலணி (footwear), ஆளிள்ளா விமானங்கள் (drones) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வணிகத்தை முன்னெடுத்து வருகிறது. இத்தகைய பல்துறை அணுகுமுறை மூலம் நிறுவனம் தனது வளர்ச்சியை விரிவுபடுத்தி வருகிறது.

Rafiq Ahmed தலைமையிலான KICL நிறுவனம் தற்போது வளர்ச்சி பாதையில் பயணித்து, Kothari பிராண்டின் பழைய புகழை மீண்டும் பெற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. NSE-ல் வர்த்தகம் தொடங்கியிருப்பது, அதன் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Related Posts