மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மகன் கரண் மாறன் ஆகியோர் இணைந்து புதிய வடிவிலான ‘மொபைல்-ஃபர்ஸ்ட்’ டிஜிட்டல் ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
‘மாறன் குரூப்’ (Maran Group) கீழ் வரும் இந்த OTT தளம் மே 28-ஆம் தேதி பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பிரத்யேகமாகப் பார்க்கும் வகையில், இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் ‘மைக்ரோ டிராமாக்கள்’ (Short Dramas) மற்றும் குறுகிய வடிவ வீடியோ தொடர்களைக் கட்டணச் சந்தா முறையில் (Subscription Platform) வழங்குவதற்காகவே இந்தத் தளம் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா மே 28-ஆம் தேதி சென்னை, அடையாறு லீலா பேலஸில் நடக்க இருக்கிறது. இதற்காக பிரத்தியேகமான அழைப்பிதழை அச்சடித்துள்ளது மாறன் குரூப். ஒரு டிவி ரிமோட்டை இந்த அழைப்பிதழில் இணத்துள்ளனர். இந்த டிவி ரிமோட்டில் “கண்ட்ரோல் மாறல… எக்ஸ்பீரியன்ஸ் மாறுது” என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.









