BREAKING

பிஸினஸ்

இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகத் தொழிலில் கால்பதித்த KICL

இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகத் தொழிலில் கால்பதித்த KICL

இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோக (Non-Ferrous Metals) தொழிலில் கால்பதித்துள்ளது கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL).

சுமார் நூறு ஆண்டுகளை தாண்டி இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம். தமிழகத்தில் உரம், கல்வி, டெக்னாலஜி, ட்ரோன் பயிற்சி மையங்கள், Non Leather shoe தொழிற்சாலை மற்றும் ”உணா வில்லா” சங்கிலித்தொடர் (chain of restaurants) ரெஸ்டாரென்ட்டுகள்.. என பல்வேறு துறைகளில் KICL நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

இந்த நிலையில், இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் உற்பத்தி, பதப்படுத்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட KICL தயாராகியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Tvasta நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் 3D கான்கிரீட் பிரிண்டிங் (3D Concrete Printing) தொழில்நுட்பத் திட்டங்கள், கரூரில் அடிடாஸ் காலணி உற்பத்தி தொழிற்சாலை, இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து காலணி வடிவமைப்பு (Shoe Designing) பள்ளி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் KICL தனது அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

பாரம்பரிய உரத்தொழிலிருந்து நவீன டிரோன் தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன், தற்போது உலோகத் துறையிலும் கால்பதித்துள்ளதால், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து தொழில்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Posts