BREAKING

பொது

புதிய கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா

‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனது புதிய கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா. கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளிலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

முன்னாள் முதலமைச்சர் J. Jayalalithaa மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்பொழுது அதிமுகவில் இருந்து பிரிந்த சசிகலா, அரசியலில் நேரடியாக கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் C. N. Annadurai, M. G. Ramachandran மற்றும் J. Jayalalithaa ஆகிய தலைவர்களின் படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று அந்தக் கட்சியின் பெயரையும் தெரிவித்துள்ளார் சசிகலா. ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தென்னந்தோப்பை சின்னமாக அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார் சசிகலா. இந்த சந்திப்புக்குப் பிறகு தனது கட்சி பெயரை அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தரப்பும் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட முடியுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எந்த வருடமும் இல்லாத வகையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணிகளாக மாறியுள்ளது திமுக கூட்டணி. அதேபோல் அதிமுக கூட்டணியும் சற்று வலுவாகவே உள்ளது. தவெக கட்சி இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. இந்த இரண்டு முக்கியக் கட்சிகளும் இல்லாத புதிய கூட்டணி அமைப்பது பற்றி சசிகலா மற்றும் ராமதாஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு மூலம், வரவிருக்கும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Related Posts