ஐபோன் 17 இந்தியாவில் 19/09/2025 வெள்ளிக்கிழமை இன்று விற்பனைக்கு வந்ததும், போன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய ஐபோனை வாங்குவதில் மக்கள் காட்டிய ஆர்வம், இந்த iphone 17 launching நாளில் ஒரு திருவிழா போன்றே மாறிவிட்டது.
டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டாலும், மக்கள் பலர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மும்பை BKC-யில் உள்ள ஜியோ சென்டர் ஆப்பிள் ஸ்டோரில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை வாங்குவதற்கு ஆவலுடன் வந்திருந்தனர். மேலும், புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்த முன்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகின்றன. இந்த புதிய ஐபோனை வாங்க மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். அதேபோல், டெல்லியில் உள்ள Saket’s Select Citywalk Mall-யில், புதிய ஐபோனை வாங்குவதற்காக மக்கள் இரவு முழுவதும் காத்திருந்தனர். இதன் விலை அதிகமாக இருந்தாலும், ஐபோன் 17 மீது மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும், அதற்கான பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஐபோன் 17-இன் விலைகள்:
ஐபோன் 17: ₹82,900
ஐபோன் 17 ஏர்: ₹1,19,900
ஐபோன் 17 ப்ரோ: ₹1,34,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்: ₹1,49,900









