BREAKING

பொது

அமெரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா…! அலெர்ட் ஆகும் உலகநாடுகள்!

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. Omicron குடும்பத்தைச் சேர்ந்த இந்த புதிய sub-variant BA.3.2, அறிவியல் ரீதியாக “Cicada” என அழைக்கப்படுகிறது. முதன்முதலில் 2024-ல் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், 2025 இறுதியிலிருந்து அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது இது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதால், உலக சுகாதார அமைப்புகள் இது குறித்து பேச ஆரம்பித்துள்ளன.

இந்த புதிய variant-ஐ குறித்து அதிகமாக பேசப்படுவதற்கான முக்கிய காரணம் அதன் மரபணு (genetic) மாற்றங்கள். BA.3.2-ல் சுமார் 70–75 மரபணு மாற்றங்கள் (mutations) உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு அதிகமான மாற்றங்கள் இருப்பதால், இது மனிதர்களுக்குள் வேகமாக பரவக்கூடிய திறன் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.மேலும், முன்னர் ஏற்பட்ட தொற்று அல்லது தடுப்பூசி மூலம் கிடைத்த எதிர்ப்புசக்தி (immunity) இதை ஒரு சில சதவீதம் தடுக்கும் திறன் கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல, இது ஆபத்தானது என்பதற்கும், அதிக மரணங்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என்பதற்கும் எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லை.

அமெரிக்காவில், இந்த வகை கொன்றன தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், covid-19 போல உடனடி பெரிய அளவிலான அலை (wave) உருவாகும் அபாயம் இல்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

BA.3.2 வகை வைரஸ் தொற்று ஏற்பட்டால், Omicron போன்றே, தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சோர்வு, மூக்கடைப்பு, தலைவலி போன்ற சாதாரண அறிகுறிகளே அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பாலானவர்களுக்கு இது லேசான பாதிப்பாகவே இருக்கலாம் என்றாலும், முதியவர்கள் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த புதிய வகை தொற்று யாருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், முகக்கவசம் பயன்படுத்துதல், கைகளை சுத்தமாக வைத்தல், booster தடுப்பூசி எடுத்து கொள்ளுதல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Related Posts