BREAKING

பொழுதுபோக்கு

திரைப்படங்களில் வெறுப்பு பிரச்சாரம்.. வைரலாகும் வெற்றிமாறன் பேச்சு!

கோடிக்கணக்கில் செலவு செய்து சிலர் வெறுப்பு பிரச்சாரம் செய்வதற்காக படம் எடுப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

சமீபத்தில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக “துரந்தர்: தி ரிவெஞ்ச்” (Dhurandhar: The Revenge) திரைப்படம் வெளியானது. இப்படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

இப்படத்தில் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பணமதிப்பிழப்பை அறிவிப்பது ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின்படி, பாகிஸ்தானிடம் இந்திய ரூபாய் நோட்டுக்களை அடிக்கும் அச்சுகள் கிடைத்து கள்ளநோட்டு புழக்கம் இந்தியாவில் அதிகரித்த நிலையில் அதை தடுக்கவே பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரந்தர் 2 படத்தில் இடம்பெற்ற பணமதிப்பிழப்பு தொடர்பான காட்சிகளை இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்துள்ளார்.

1980களில் போர் சூழலில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் வழக்கைமுறை குறித்து, இயக்குநர் சோமித்ரன் உருவாக்கி வரும் ‘நீளிரா’ படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா கடந்த 27 ஆம் தேதி நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இன்றைக்கு எல்லாமே Propaganda-வாக மாறுகிறது. அந்த Propaganda நினைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நினைவுகள் என்பது நிலையற்றது. நம் எல்லாருக்குமே தெரியும் Demonetisation-னில் யார் அதிகம் பாதிக்கப்பட்டது என்று எவ்வளவு பேர் பணத்தை பெற வரிசையில் நின்று செத்து போனார்கள் என தெரியும். ஆனால் அந்த தாக்கத்தை எளிமையாக மாற்ற முடிகிறது. அவதூறு பிரசாரத்துக்கு எதிராக நாம் செய்ய வேண்டியது இது போன்ற படங்களை எடுப்பது. அதன் மூலம் நம் நினைவுகளை சரியான வகையில் வடிவமைக்க உரையாடலை உயிர்போடு வைத்திருக்க வேண்டும்” என்றார். அவருடைய பேச்சு இணையத்தில் வைரல் ஆனது. அவருடைய கருத்தை பலர் வரவேற்றுள்ள நிலையில், சிலர் அவர் இயக்கிய ‘விடுதலை’ படம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related Posts