IPL 2026 சீசனில் கோப்பையை வென்ற RCB அணியை விட அதிகமாக பேசப்படுபவர் RR அணியின் புயல் வைபவ் சூர்யவன்ஷிதான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி, 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். அதுவும் 237.30 என்ற நம்ப முடியாத ஸ்டிரைக் ரேட்டில். IPL வரலாற்றில் மிகச் சிறந்த அதிரடி சீசன்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் ஆரஞ்சு கேப் மட்டுமல்லாமல் MVP, Emerging Player, Super Striker, Super Sixes உள்ளிட்ட ஐந்து முக்கிய விருதுகளை வென்று IPL வரலாற்றில் புதிய சாதனையும் படைத்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 75 பவுண்டரிகள் அடித்து சீசனின் மிகவும் நிலையான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். ஷுப்மன் கில்லுடன் அவர் சேர்ந்து உருவாக்கிய தொடக்க ஜோடி இந்த சீசனின் முக்கிய அம்சமாக இருந்தது.

பந்துவீச்சில் ககிசோ ரபாடா 29 விக்கெட்டுகள் கைப்பற்றி ‘பர்பிள்’ கேப்பை வென்றார். முக்கிய போட்டிகளில் அவர் வீசிய ஸ்பெல்கள் குஜராத் டைட்டன்ஸை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கே.எல்.ராகுல் ஒரே போட்டியில் 152 ரன்கள் குவித்து சீசனின் மிகப்பெரிய தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தார்.

லக்னோ அணியின் மொஹ்சின் கான் 5/23 என்ற சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்தார்.

கொல்கத்தா அணியின் சுனில் நரேன் 6.65 என்ற எகானமி ரேட்டில் பந்துவீசி மீண்டும் தனது மதிப்பை நிரூபித்தார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் பெரிதாக இந்த சீசனில் ஜொலிக்கவில்லை என்றாலும், சஞ்சு சாம்சன் இரண்டு சதங்கள் அடித்து தனிப்பட்ட சாதனையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.








