வரும் டிசம்பர் 10 ஆம் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவில் 16 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது கணக்குகளை துவங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களால் சிறுவர்களிடையே ஏற்படும் மன அழுத்தம், உடல்நலக்கோளாறு, கவனக்குறைவு உள்ளிட்ட சிக்கல்களை குறைக்கும் நோக்கத்தில், உலகிலேயே முதன் முறையாக, ஆஸ்திரேலிய அரசு இந்த தடையை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 10 முதல் 15 வயது வரையிலான 96 சதவீத குழந்தைகள் சமூகவலைதங்களை பயன்படுத்துவது அந்நாட்டு அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 10ல் 7 சிறுவர்கள் ஆபத்தான மற்றும் தீமை விளைவிக்கக்கூடிய காணொளிகள், புகைப்படங்கள் போன்றவற்றை பார்ப்பதும் தெரியவந்துள்ளது. 7ல் ஒரு குழந்தை, இணைய வழியில் பாலியல் ரீதியான சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. இன்னும் சில குழந்தைகள் சைபர் கிரிமினல்கள் விரிக்கும் வலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான விஷயங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கவே இப்படியொரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டு அரசின் நடவடிக்கையால், Facebook, Instagram, Snapchat, Threads, TikTok, X, YouTube, Reddit, Kick மற்றும் Twitch ஆகிய தளங்களில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் கணக்கு துவங்க அனுமதியில்லை. சில ஆன்லைன் கேமிங் தங்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறையாக இந்த தடையை அமல்படுத்தாவிட்டால் அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
YouTube Kids, Google Classroom மற்றும் WhatsApp ஆகியவற்றிக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு அடையாள அட்டை, செல்ஃபி வீடியோ, வாய்ஸ் டெஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தி சிறார்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டென்மார்க்,நார்வே போன்ற நாடுகள் இதேபோன்ற தடையை அமல்படுத்த வரைவுகளை தயாரித்து வருகின்ற நிலையில், உலகிலேயே முதன்முறையாக அமெரிக்கா இந்த தடையை அமல்படுத்தியுள்ளது.









