BREAKING

பொது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு.. தஷ்வந்த் விடுதலை.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தஷ்வந்த்தை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு போரூர் அருகே ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த தஷ்வந்த், தன் தாய் சரளாவை அதே ஆண்டு கொலை செய்துத் தப்பியதாக எழுந்த புகாரில், அவரை தனிப்படை காவல் துறையினர் மும்பையில் கைது செய்தனர்.

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ் சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018 ஆம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல என்றும், டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என்றும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts