BREAKING

பொது

மீன்களில் மலட்டுத்தன்மை… கவலையளிக்கும் காலநிலை மாற்றம்!

”மீன் சாப்டுங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லது..” இப்படி சொல்லாத மருத்துவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவாக இருந்து வருகிறது. உலகில் பலபகுதிகளில் கடற்கரையோரம் மற்றும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பிராதான உணவாகவே மீன் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கிட்டதட்ட 72 சதவீத மக்கள், மீன்களை எதோ ஒரு வகையில் உணவாக உட்கொள்கின்றனர்.

விலங்குகள், பறவைகள் உட்பட பல உயிரினங்கள் உணவுக்காக மீன்களை நம்பியே இருக்கின்றன. ஆனால் அந்த மீன்களின் இனப்பெருக்கம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் இருக்கிறது.

காலநிலை மாற்றம் என்ன  செய்கிறது?

கடந்த 40 வருடங்களில் மனிதர்களில் நடவடிக்கைகளால், வளிமண்டலத்தில் (atmosphere) கார்பன்-டை-ஆக்ஸைடின் (CO2) அளவு அதிகரித்துள்ளது. அத்துடன் மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களும் (Greenhouse gases) அதிகரித்துள்ளன.

இதனால் பூமி அதிவேகமாக வெப்பமடைந்து வருகிறது. அதன் காரணமாக இயல்புக்கு மாறான அவையில் இயல்புக்கு மாறான மழை என யாரும் கணிக்க முடியாத அளவிற்கு காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பூமியின் 70% பரப்பை கடல் நீரே ஆக்கிரமித்து உள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் நீர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடலின் அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. டலின் வெப்பநிலை அதிகரித்து பல கடல்வாழ் உயிரினங்களின் இருத்தலே கேள்விக்குறியாக மாறியுள்ளது.க

மீன்கள் சந்திக்கும் சவால்கள்!

சுற்றுச்சூழலில் ஒரு சிறிய மாற்றம் வந்தாலும் அது மீன்களுக்கு தெரிந்து விடும். காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் வெப்பம் மீன்களை பாதிக்கின்றது; குறிப்பாக அவற்றின் இனப்பெருக்கத்தை கடுமையாக பாதிக்கின்றது. வெப்பநிலை காரணமாக சில மீன் வகைகளில் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு பெண் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் தன்மையை இழக்கின்றன.

 

பனிப்பிரதேசங்களில் பனிப்பாறைகள் உருகி அப்பகுதியில் கடல் நீரில் உப்பு தன்மையை மாற்றுகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மீன்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. ஆனால் புதிய இடங்களில் அந்த மீன்களுக்கு தேவையான வெப்பநிலையும், உணவும், சூரிய ஒளியும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

 

இந்தியாவை பொறுத்தவரை மன்னார் வளைகுடாவில் மீன்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் இருக்கின்றது. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பால், மன்னார் வளைகுடாவில் இருக்கும் பவளப்பாறைகள் வெண்மையடைந்து சிதைவடைகின்றன. 2016ல் மட்டும் சுமார் 16% பவளப் பாறைகள் அழிந்தன. இதனால் பல மீன்களின் இனப்பெருக்க இடங்கள் அழிந்தன. அமிலத்தன்மை காரணமாக மீன் முட்டைகள் பாதிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் நடவடிக்கை

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அறிவியல் பூர்வ ஆய்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நீடித்த மீன்வளம் மற்றும் மீன் உற்பத்திக்கான நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அசாம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள ஈர நிலங்களில் மீன் வளர்ப்புக்கான சூழல் குறித்த மதிப்பீடுகளை மத்திய அரசு செய்துவருகிறது. முக்கிய ஆற்றுப் படுகைகளில் பருவநிலை மாற்றம் குறித்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மீன் விநியோகம், மீன் உற்பத்தி, மீன் பிடித்தல் போன்றவற்றில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொண்டு, மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மத்திய அரசு செய்துவருவதாக ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.

 

 

Related Posts