BREAKING

பொது

டிரம்ப் கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் இந்தியர்கள்!

H1B விசாவின் கட்டணத்தை உயர்த்தி அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலைக்கான விசா. பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் H1B விசா lottery system மூலம் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது H1B விசா விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிகள் படி, H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமில்லாமல், புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு நாளை (செப்.,21) முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மைக்ரோசாப்ட், ஜேபி மார்கன், அமேசான் நிறுவனங்கள், தங்களது H1B விசா ஊழியர்களை அமெரிக்காவில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் ஊழியர்கள், உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்னதாக உடனடியாக அமெரிக்காவுக்கு வந்து விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அமேசான் நிறுவனம், 12 ஆயிரம் ஊழியர்களுக்கு H1B விசா பெற்றுள்ளது. பேஸ்புக் உரிமையாளரான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தலா 5 ஆயிரம் ஊழியர்களுக்கு H1B விசா பெற்றுள்ளன. டிரம்ப் விதித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் காரணமாக, அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விசாவால் இந்தியர்கள் அதிகம் பயனடைந்து வரும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts