கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் சர்வதேச அளவிலான வடிவமைப்பாளர்களை தமிழ்நாட்டில் இருந்து உருவாக்க ஒரு பெரும் முயற்சியை எடுத்துள்ளது.
நூற்றாண்டு பெருமைகளை கொண்ட கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது. காலணிகளை உற்பத்தி செய்வதோடு அல்லாமல் காலணிகளை வடிவமைப்பதற்கும் ஒரு வடிவமைப்பு கல்லூரியை கட்டமைக்க திட்டமிட்டது.

இதன் அடிப்படையில் இத்தாலியில் உள்ள IUAD வடிவமைப்பு கல்லூரியுடன் இணைந்து சென்னையில் ஒரு வடிவமைப்பு கல்லூரியை கட்டமைக்க இருக்கிறது. இதற்கான 2026 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தை வகுப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக IUAD நிறுவனத்தின் தலைவர் Michele Lettieri சென்னை வந்திருந்தார். கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஜின்னா ரஃபீக் அகமதுவை நேரில் சந்தித்த அவர் இது சம்பந்தமாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் CEO மோகன், Management trainee இப்ராகிம் ரபீக் உள்ளிட்டோர் உடன் இருந்தன.


அப்போது கோத்தாரி நிறுவனத்தின் சேர்மன் ஜின்னா ரஃபிக் அகமது பேசுகையில், IUAD Italy நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குழுவினரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை (Joint Venture Company) தொடங்கியுள்ளோம் என்பது மகிழ்ச்சியான செய்தி. மேலும், 2026ஆம் ஆண்டில் பாட வகுப்புகளை தொடங்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இந்த நிறுவனம் மூலம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் சர்வதேச அளவிலான வடிவமைப்பாளர்கள் உருவாகுவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு பெருமையான தருணம்” எனக் கூறினார்.









