ஜனநாயகன் திரைப்படத்தை தேர்தல் ஆணையம் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசிப் படமாக சொல்லபடும், ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தனிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால், அது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதற்கிடையே, படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் படம் வெளியாவது தள்ளி சென்றது.
உச்ச நீதிமன்ற வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் ‘ஜன நாயகன்’ பட மறுதணிக்கை தொடர்பான வழக்கை படக்குழு திரும்ப பெற்றது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கான மறு ஆய்வு மும்பையில் நடந்து முடிந்துள்ளதாகவும், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என மறு ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், ‘ஜன நாயகன்’ படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளளது. மே 10 ஆம் தேதிக்கு பிறகுதான் படம் வெளியாகும் என்ற நிலை எழுந்திருபது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுதியுள்ளது.









