மதுரை சிவரக்கோட்டையில் உள்ள கோத்தாரி பப்ளிக் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் பூரண பூஜாங்காச யோகாசனம் செய்து ஆஸ்கார் உலக சாதனை செய்துள்ளனர். 100 ஆண்டுகளை தாண்டியும் இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL), தமிழகத்தில் உரம், கல்வி, ட்ரோன், Non-Leather Shoe தொழிற்சாலை மற்றும் “உணா வில்லா” ரெஸ்டாரண்ட் போன்ற பல துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு அங்கமான கோத்தாரி பப்ளிக் பள்ளி மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் 6 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. படிப்பு, Extra Curricular activties என மாணவர்களுக்கு தரமான கல்வி முறையை இப்பள்ளி வழங்கிவருவதாக உள்ளூர் மக்கள்ளின் நன்மதிப்பை பெற்றுவருகின்றது.

இந்நிலையில் கோத்தாரி பப்ளிக் பள்ளி மற்றும் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் அமைப்பு இணைந்து பள்ளி குழந்தைகளுக்கான யோகா போட்டிகளை நடத்தின. இந்த போட்டிகளில் 5 முதல் 15 வயது வரையிலான 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். போட்டியின் முக்கிய நிகழ்வாக 150 குழந்தைகளும் ஒரே நேரத்தில் பூரண பூஜாங்காசனம் என்ற யோகாசனத்தை செய்து அசத்தினார். இது ஆஸ்கார் உலக சாதனையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் யோகா கலை குறித்த ஆர்வத்தை குழந்தைகளிடையே ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்ததாக குழந்தைகளின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இணைந்து யோகா செய்வதில் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, கோத்தாரி பப்ளிக் பள்ளியின் Principal J.கற்பகவள்ளி, ஒருங்கிணைப்பாளர்கள் ரேணுராம் பாலா, கதிரவன் ஆகியோர் தெரிவித்தனர்.









