BREAKING

பிஸினஸ்

இனி PF எடுக்க அலைய வேண்டாம்! ATM இருந்தால் போதும்

நம்ம சம்பளத்தில் மாதம் மாதம் PF பிடிப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இது நமது சம்பளத்தில் ஒரு பகுதியையும், பணியாற்றும் நிறுவனமும் சேர்த்து செலுத்தும். நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமானோர் PF திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளனர். இது ஒரு சேமிப்பு போன்றதே. அவசரத் தேவை ஏற்பட்டாலோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ இது நமக்கு உதவும். அதோடு, வருடத்துக்கு 8.25% வட்டி கிடைக்கிறது.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அவசரத் தேவைகளுக்காக இதனை எடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இணையதள கோளாறு, பணம் வருவதில் தாமதம் என தங்கள் பணத்தை எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தில் விரைவில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது என்னவென்றால், PF பணத்தை நேரடியாக ATM கார்டு மூலம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், வங்கிகளுக்கு செல்லும் சிரமம் குறையும். அதோடு, PF கணக்கை UPI எண்ணுடன் இணைத்து, பணத்தை எளிதில் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதியும் வரபோகுது.

இந்த திட்டம் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அக்டோபர் 10, 11 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
தீபாவளிக்கு முன் இந்த வசதி அமலுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Related Posts