ராமேஸ்வரம் பாம்பன் மையத்தில் நபர் ஒருவர் கடலில் குதிக்கும் விபரீதமான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
முதலில், இந்தச் செயல் ரீல்ஸ் எடுப்பதற்காக செய்யப்பட்டது என்று பலரும் கூறிவந்தனர். ஆனால், அந்த நபர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடனேயே பாலத்திலிருந்து குதித்தார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபர் கடலில் குதிக்கும் சமயத்தில், பாம்பன் பாலத்தைக் கடந்துச் சென்ற ரயிலில் பயணித்த ஒருவர், எதிர்பாராத விதமாக இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

கடலில் குதித்த அந்த நபர் என்ன ஆனார் என்று தெரியவில்லை; காவல்துறையினர் காணாமல் போனவரை (Man Missing) என வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
தற்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அந்த நபரின் உடலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.









