நேற்று மதுரையில் தவெக நடத்திய 2வது மாநாடு, லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
அரசியலில் ஆக்டிவாக மாறிவரும் விஜய், ஜனநாயகன் திரைப் படத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைப்பதாக முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் கதாநாயகியான நடிகை பூஜா ஹெக்டே, விஜய் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக கருத்து தெரிவித்தார்.
“ஜனநாயகன் விஜய்யின் கடைசிப் படம் என்பதாலும், இது அரசியல் தொடர்புடைய திரைப் படம் என்பதாலும், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுமட்டுமல்லாமல், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 2026 தேர்தல் களத்தில் இந்தப் படத்தின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பது அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் விஷயம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பூஜா ஹெக்டே, ‘விஜய் சார் கூட படப்பிடிப்பில் இருந்தது ஒரு அழகான அனுபவம். இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ஆனால் அதை அவர் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. மிகவும் அமைதியானவர்; அந்த அமைதிதான் அவரது பலம். இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றியபோது, இது அவரது கடைசிப் படம் என்ற எண்ணம் வந்தவுடன் மிகவும் சோகமாக இருந்தது. ஒரு சிறந்த நடிகர், எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை விட்டு பிரியப் போகிறார் என்ற வருத்தம் ஏற்பட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.








