தீபாவளி அன்று இந்திய பங்குச் சந்தையில் ஒரு மணி நேரம் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை நேற்று அறிவித்துள்ளது.
வருடத்தில் ஒருமுறை அட்சய திருதியில் மக்கள் தங்கம் வங்குவது வழக்கம். அந்த நாளில் தங்க நகைகள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது ஒரு ஐதிகம். இதே போல், இந்திய பங்கு சந்தையிலும் ஒரு வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று ஒரு மணி நேரம் சிறப்பு முகூர்த்த டிரேடிங் நடைபெறும். இந்த தினத்தில் பங்குகள் வாங்கினால் ஸ்பெஷலாக லாபம் கிடைக்கும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி மதியம் 1:45 மணி முதல் 2:45 மணி வரை இந்த சிறப்பு வர்த்தகம் நடைபெறும். இந்த நேரத்தில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள், ETF களில் முதலீடு செய்யலாம். இந்த முகூர்த்த வர்த்தகம் புதிய நிதியாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. தற்போது விக்ரம் சம்வத் ஆண்டு 2082 ஆகும்.
கடந்த ஆண்டு, சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வு மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.









