BREAKING

பொது

முன் ஜென்ம காதலர்கள்… இரட்டையர்களுக்கு திருமணம் செய்யும் தாய்லாந்து மக்கள்

ஆடம்பரமான திருமணம்… வைரலான வீடியோ… மணமகள், மணமகனின் கன்னங்களில் ஒரு சடங்காக முத்தமிடுவதுடன் தொடங்குகிறது அந்த வீடியோ. இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி… ஏனெனில் அந்த மணமகள் மற்றும் மணமகனுக்கு வயது வெறும் 4. இருவரும் இரட்டையர்கள்.

இந்தியாவில் பெரும்பாலும் இரட்டையர்கள் பிறந்தால், சகோதரர் மற்றும் சகோதரியாகவே பார்க்கப்படுவார்கள். ஆனால் தாய்லாந்தில் இதற்கு மாறான ஒரு நடைமுறை உள்ளது. ஆண்-பெண் இரட்டையர்களாக பிறந்தால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். அதன்படி தான், இந்த வீடியோவில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் தலைமையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

“அண்ணன்-தங்கை அல்லது அக்கா-தம்பி என்று இருப்பவர்களுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பார்கள் ?” என ஒரு கேள்வி எழலாம். ஆனால் இதற்கான அவர்கள் கூறும் காரணம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த ஆண் மற்றும் பெண் இரட்டையர்கள், முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்து இருப்பர்கள் என்பது அங்குள்ள புத்த மதத்தினரின் நம்பிக்கை. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், அது துரதிருஷ்டமாகும் என்று அவர்கள் நம்புகின்றனர். மேலும், திருமணம் நடைபெறாவிட்டால், அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த திருமணத்தின்போது, குடும்பத்தினர் மணமகளுக்கு நான்கு மில்லியன் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்) மற்றும் 180 பாட் எடையுள்ள தங்கமும் வழங்கி பாரம்பரிய வரதட்சணையை வழங்கினர்.

Related Posts