நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி முதல்முறை போட்டியிட்ட தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களை தவெக பெறாததால் ஆட்சியமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை. விஜய் ஜெயித்து இருக்கும் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்யவேண்டும். அந்த நிலையில் தவெகவின் பலம் 107 ஆக மட்டுமே இருக்கும்.
இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை இருக்கிறது. இந்நிலையில் தவெக பெரும்பான்மை பெற யார் ஆதரவு அளிப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவிற்கு பாஜக கொள்கை எதிரி என்பதால், அதிமுக (47) பாஜகவுடன் உள்ள கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்கலாம் ஒரு தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள்.
காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய இடதுசாரி கட்சிகளும் கிட்டதட்ட ஆதரவு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரான நிலையிலும் விஜய்யை மதச்சார்பற்ற சக்தியாக இவர் கருதுவதாலும் இந்த நிலையை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இவ்வாறு இணையும் பட்சத்தில் தவெகவிற்கு போதுமான பலம் கிடைக்கும்.
ஏற்கனவே பாமக தரப்பில் நிபந்தனையுடன் ஆதரவு தர தயாராய் இருப்பதாக தூதுவர் மூலமாக தகவல் அனுப்பியுள்ளனர்.
விஜய் கவர்னருக்கு 14 நாட்கள் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் விஜயின் நெருக்கமான வட்டத்தினர் “கூட்டணி சேர்த்து ஆட்சி நடத்துவது கத்தி மேல் நடப்பது போல. அதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. கவர்னர் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கட்டும்; அதுவரை காத்திருப்போம்” என அறிவுரை சொல்லியிருக்கிறாராம்.
இதெயெல்லாம் கேட்ட விஜய் என்ன முடிவெடுப்பது என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம்.









