BREAKING

லைஃப் ஸ்டைல்

ஸ்க்ரோல் செய்துகொண்டே இருக்கிறீர்களா? விரைவில் வயதாகும் மூளை செல்கள்!

சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக காணொளிகள் பார்த்துக்கொண்டு மணிக்கணக்கில் மொபைலில் மூழ்கி கிடப்பவர்களின் மூளை செல்கள் சீக்கிரமே வயதடைவதாக தெரியவந்துள்ளது.

காலை எழுந்தவுடன்  கையில் எடுக்கும் மொபைலை இரவு தூங்க செல்லும்வரை சிலர் கீழே வைப்பதே இல்லை. ரீல்ஸ், ஷார்ட்ஸ், ட்வீட், ஸ்னாப், போஸ்ட்டுகள், வீடியோக்கள் என வரைமுறையை இல்லாமல் மாறி மாறி நேரம் போவதே தெரியாமல் பார்த்துக்கொண்டே இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. மொபைல் பார்ப்பது என்பது ஒரு வகை அடிக்ஷனாக மாறி வருகிறது.

“Mobile Addiction” – மூளையை எப்படி பாதிக்கிறது?

ஏதேனும் தகவலுக்காக மொபைலில் தேட ஆரம்பித்து கடைசியில் பூனை கத்தும் வீடியோ, நாய் நடக்கும் வீடியோ, குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ, புது ஜோடிகள் ஆடும் வீடியோ என தேவையில்லாத எதையெதையோ பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். இப்படி ரீலிஸ், ஷார்ட்ஸ் போன்ற சிறிய காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்கும்போது மூளையில் அயர்ச்சி ஏற்படுகிறது. இந்த அயர்ச்சியானது உடலையும் சோர்வடையச்செய்கிறது. அதிக அளவில் மூளை சோர்வடைந்து உடலும் சோர்வடைவதை ஆங்கிலத்தில் ‘brain rot’ என்று அழைக்கின்றனர். இது ஒருவரின் அறிவாற்றல் திறனை கடுமையாக பாதிக்கின்றது.

மேலும் பலருக்கு ஹார்மோன் பிரச்சனைகள், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல், மொபைலில் அதிக நேரம் ஸ்க்ரோல் செய்யும்போது ‘டோபமைன்’ எனப்படும் ஒரு வகை ஹார்மோன் சீரற்ற தன்மையில் சுரப்பதால், நினைவாற்றல் திறன் குறைவு, கவன சிதறல் போன்றவை ஏற்படுகிறன.

தொடர்ச்சியாக டிஜிட்டல் தூண்டுதலுக்கு ஆளாகுதல், ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்கிறது. இந்த ஹார்மோன் மூளையின் செல்களை பாதித்து அவற்றை வேகமாக வயதடைய செய்கிறது.

“Mobile Addiction” – குறைப்பது எப்படி?

“Mobile Addiction”ல் இருந்து முற்றிலுமாக உடனடியாக வெளியே வருவது கொஞ்சம் கடிமானதுதான் என்றாலும், படிப்படியாக வெளியே வர முடியும்.

1. முதலில் நீங்கள் பார்க்கும் தகவல்களை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையற்ற சேனல், நபர்களை பின்தொடர்வதை நிறுத்தவேண்டும்.

2. மொபைலில் screen-time செட் செய்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சமூகவலைத்தளங்கள் வேலைசெய்யும்படி செட்டிங்கில் மாற்றம் செய்யலாம்.

3. உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது, வெளியே சென்று இளைப்பாறுவது, நண்பர்களுடன் பேசுவது போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

4. சரியான நேரத்தில் உறங்கவேண்டும். உறங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் மொபைல் போனை பார்ப்பதை நிறுத்துவது நல்ல தூக்கம் வரவைக்கும்.

5. மூளையில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய, சரியான உணவுமுறை, தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம்.

Related Posts