கோவையில் நடைபெற்று வரும் விவசாய பொருட்கள் கண்காட்சியில் கோத்தாரியின் டிரோன் வாகனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கோடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் Agri Intex 2025 விவசாயப் பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் எராளமான வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது தென்னிந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விவசாய தொழில்நுட்பக் கண்காட்சியாகும்.
இந்த கண்காட்சியில் கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது டிரோன் வாகனத்தை காட்சிப்படுத்த ஒரு அரங்கினை அமைத்துள்ளது (E-110). இதில் மருந்து தெளிக்கும் டிரோன்கள், உயிரி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
நேற்று இந்த அரங்கத்தை கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ஜெயந்த் முரளி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கோத்தாரி நிறுவனத்தின் உரம் மற்றும் டிரோன் பிரிவின் முக்கிய அலுவலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதில் காட்சிப்படுத்தப்படும் டிரோன் வாகனமானது விவசாயிகள் தங்களது வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பதை மிகவும் எளிய முறையிலும் விரைவாகவும் செய்து முடிப்பதாகும். விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்தி டிரோன் மூலமாக மருந்து தெளிக்க ஒரு போன் செய்தால் மட்டும் போதும் டிரோன் வாகனம் அவர்களின் விவசாய நிலத்திற்கே வந்து பூச்சி மருந்து தெளித்து தரும் வகையில் இந்த சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.










