BREAKING

பொழுதுபோக்கு

அமேசான் பிரைம்… நீங்களுமா இப்படி?

அமேசான் பிரைம் OTT தளத்தில் விளம்பரம் இல்லாமல் படங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் வீட்டை விட்டு யாரும் வழியே செல்லமுடியாத நிலை இருந்த போது, மக்களுக்கு திரைப்படங்களை வீட்டிலேயே கொண்டு சேர்த்தவை OTT தளங்கள். ஆனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும் OTT தளங்களின் மவுசு குறையவில்லை. இப்போது வரை புதிது புதிதாக சப்ஸ்க்ரைப்கர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்போது வெளியாகும் பல திரைப்படங்கள் Netflix, Hotstar, Amazon Prime, aha உள்ளிட்ட பல OTT தளங்களில் வெளியாகின்றன. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்தும் இந்த OTT தளங்களில் கிடைப்பதால் பலர் அவற்றை சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடையில் வரும் விளம்பரங்கள் பார்வையாளர்களுக்கு தொல்லையாக இருந்தன. Amazon Prime தவிர மற்ற பல முக்கியமான OTT தளங்கள், படத்திற்கு நடுவே இதுபோல விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு கூடுதல் சந்தா வசூலித்து வந்தன.

இந்நிலையில், Amazon Prime OTT தளமும் மற்ற OTTகளை போல விளம்பரங்கள் இல்லாமல் படங்களைக் காணக் கூடுதல் சந்தா பெறத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 17ம் தேதியிலிருந்து விளம்பரங்கள் இல்லாமல் படங்களைப் பார்க்க, ஒரு சந்தாதாரர் மாதம் ரூ.129 அல்லது வருடத்திற்கு ரூ.699 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று Amazon பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts