BREAKING

டெக்னாலஜிபொது

ஆந்திராவில் வரப்போகும் AI டாக்டர்… சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்!

ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் (AI Doctor) என்ற புதிய திட்டத்தை கொண்டுவரப்போவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இப்போது அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. அந்த வகையில் மருத்துவ துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதை பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடைமுறைக்கு கொண்டுவர ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. “ஆரோக்கியமான ஆந்திர பிரதேசம்” என்ற இலக்கை கொண்டு இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.

AI டாக்டர் என்ன செய்யும்..

முதலில் மக்களின் சுகாதாரம் சார்ந்த தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். பின்னர் அந்த தரவுகளில் AI மாடல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். ஒவ்வொரு தனி நபருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட என்னென்னெ உடல்நலக்கோளாறுகள் இருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் அந்த AI மாடல்களில் பதிவு செய்யப்பட்டு, அடிக்கடி அப்டேட் செய்யபடும்.

இந்த திட்டத்தின் கீழ் AI ஒருவருக்கான உணவு, நோய் தடுப்பு குறித்த வழிக்காட்டுதல்களை வழங்கும். மாநிலம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்டு செல்ல இந்த திட்டம் பயன்படும். குறிப்பாக கிராமங்களில் சுகாதாரத்துறையில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இந்த திட்டம் சாத்தியமா?

இந்த திட்டத்தின் சாத்தியகூறுகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே AI உதவியுடன்மருத்துவ சேவைகளை செய்துவரும் நிலையில், இது சாத்தியம் என்று அம்மாநில அரசு உறுதியாக உள்ளது.

Related Posts