BREAKING

பிஸினஸ்

டிஜிட்டல் இந்தியா… ஆனால் டேட்டாவுக்கும் வரியா?

நாம் தினமும் மொபைல் போனில் வீடியோக்கள் பார்க்க, ஆன்லைன் வகுப்புகள் படிக்க, நண்பர்களுடன் வீடியோ கால் பேச, இந்த செய்தியை படிக்க என எல்லாவற்றிற்கும் டேட்டா ரொம்பவே அவசியம்.

தற்போது இந்த மொபைல் டேட்டா பயன்பாட்டுக்கு புதிய வரி விதிப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வறிக்கையை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம் மோடி அரசு.

பத்து ஆண்டுகள் பின்னாடி போய் பார்த்தால் இந்தியாவில் நெட்வொர்க் பயன்படுத்தும் மக்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் இப்போது நம்ம வாழ்க்கை முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்து மாறிவிட்டது. ஜியோவின் அன்லிமிட்டெட் டேட்டா திட்டம் வந்ததற்கு பிறகு ஏர்டெல், வோடபோன், இப்போது மத்திய அரசின் பிஎஸ்என்எல் கூட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா கொடுக்க தொடங்கிவிட்டது. இதனால் இந்தியாவில் டேட்டா பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில் புதிய வளர்ச்சிகளுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகவும் இது முக்கிய காரணமாக இருந்தது.

இந்தியாவில் சராசரியாக ஒரு நாளில் 1 ஜிபி அளவுக்கு டேட்டா பயன்படுத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 229 பில்லியன் ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஜிபிக்கு 1 ரூபாய் வரி விதிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி பார்த்தால் இதன் மூலம் அரசுக்கு சுமார் 22,900 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கலாம்.

ஏற்கனவே நாம் மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது 18% ஜிஎஸ்டி செலுத்துகிறோம். அதற்கு மேலாக டேட்டாவுக்கும் தனியாக வரி வந்தால் அது மக்களை பாதிக்கலாம். இந்தியர்கள் பெரும்பாலும் இணையத்தை சார்ந்து இருப்பதால் இது தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Related Posts