BREAKING

பிஸினஸ்

140 சதவீதம் லாபம் கொடுத்த கோத்தாரி நிறுவன பங்குகள்

கோத்தாரி இண்டஸ்ட்ரியல் காா்ப்பரேஷன் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 140% வளா்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் 2025-2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் 1, 2025 – ஜூன் 30, 2025) சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

ரூ.3,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்புள்ள 87 பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளனர். இவற்றில் சுமார் 25 பங்குகள் இரட்டை இலக்க லாபத்தை கொடுத்துள்ளன. அதோடு 11 பங்குகள் 30% முதல் 130% வரை உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. FY26 முதல் காலாண்டில், இந்த நிறுவனத்தின் பங்கு 140 % வரை உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 1, 2025 ஆம் தேதி ரூ.194-க்கு இருந்த பங்கின் விலை ஜூன் 30, 2025 ஆம் தேதி ரூ.465-ஆக அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு விகிதமும் அதிகரித்துள்ளது.

செப் 2024 (Q2 FY25) – 12.21%, டிசம்பர் 2024 (Q3 FY25) – 12.10%, மார்ச் 2025 (Q4 FY25) – 5.54%, ஜூன் 2025 (Q1 FY26) – 5.57%. இதன் மூலம் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்கின் சில்லறை முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.

Related Posts