BREAKING

பொதுவிளையாட்டு

ஸ்மிருதி திருமணம் நின்றதற்கு இதுதான் காரணம்! நண்பர் கூறிய தகவலால் வெடித்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 23ல் நடக்கவிருந்த திருமணம் நிறுத்திவைக்கப்பட்டது. திருமண நாள் நெருங்கும் வேளையில் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அந்த திருமணம் முதலில் ஒத்திவைப்பட்டது; ஆனால் பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என செய்திகள் பரவின. அந்த செய்தி குறித்து இருதரப்பினரும் எந்தவொரு பதிலும் தராமல் இருந்துவந்தனர்.

இந்நிலையில் ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே, சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், ” 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார். பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். பலாஷின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான். படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பலாஷ் முச்சல், “என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதனை நான் சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த இருவரின் கருத்துகள் குறித்தும் ஸ்மிருதி மந்தனா எந்தவித ரியாக்ஷனும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts