BREAKING

பொது

17 ஆண்டுகள் காத்திருப்பு… Velachery முதல் St.Thomas Mount வரை ரயில் சேவை!

சென்னையில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் புதிய சேவை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இனி தாம்பரம் – சென்னை கடற்கரை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அடிச்சிபுடிச்சி செல்ல வேண்டி அவசியம் இருக்காது. அப்படி என்ன சேவைனு தானே கேட்கிறீர்கள்… அதுதான் வேளச்சேரி முதல் பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை.

தற்பொழுது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை தான் பறக்கும் ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீடிப்பதற்கான பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் நேற்று அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

2008ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சிக்கல்கள், குறிப்பாக Adambakkam மற்றும் Thillai Ganga Nagar பகுதிகளில் ஏற்பட்ட வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகள் இழுபறியிலேயே இருந்தது. பின்னர் பணிகள் மீண்டும் வேகமெடுத்து, தண்டவாளம், மின்சார அமைப்பு, நிலையங்கள் போன்ற அனைத்து முக்கிய பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரயில் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று மதியம் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஆய்வை ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் Janak Kumar Garg தலைமையில் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின் போது ரயில் தண்டவாளம், சிக்னல் அமைப்பு, மின்சார வசதி மற்றும் ரயில் நிலையங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த திட்டம், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளுடன் நேரடியாக இனையும். வேளச்சேரி, அடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள் சென்னையுடைய பல பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்ய முடியும்.

இந்த ரயில் சேவை வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடற்கரை – வேளச்சேரி ரயில்கள் இனி பரங்கிமலை வரை செல்லும். இதன் காரணமாக ரயில்களின் நேரம் அடியோடு மாற்றியமைக்கப்படும். நிறைய மக்கள் வந்து செல்வார்கள் என்பதால், கூடுதல் ரயில் சேவைகள் அறிவிக்கப்படலாம்.

இதுகுறித்து பொதுமக்களிடையே கேட்டபொழுது இந்த பறக்கும் ரயில் மூலம் தங்களுக்கு அலைச்சல் குறையும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சென்னை கடற்கரை – வேளச்சேரி பகுதிகளுக்கு இயக்கப்படும் பறக்கும் ரயில் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இங்கு அடிக்கடி பயணிகளிடமிருந்து செயின் பறிப்பு, பணம் பறிப்பு, பெண் மீது தாக்குதல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த ரயில் நிலையங்களில் இருந்து மெயின் ரோடுகளுக்கு செல்லும் வழியில் குடிசை பகுதிகள் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் பயணிக்க சற்று பயப்படுவதாக அதனை தெற்கு ரயில்வே கருத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Related Posts