மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் எரிசக்தி தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய், LPG ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால், அந்த சூழலை இந்தியா திறமையாக கையாண்டது.
இதற்கு காரணம், இந்திய அரசின் Indian Strategic Petroleum Reserves Limited (ISPRL) என்ற நிறுவனம். இது கடந்த 2000 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவில் மூன்று மாபெரும் கச்சா எண்ணெய் உருவாக்கப்பட்டது. விசாகப்பட்டினம் (1.33 MMT), மங்களூர் (1.5 MMT), படூர் (2.5 MMT) என மொத்தம் சுமார் 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும். இந்த சேமிப்பின் மூலம், சுமார் 9–10 நாட்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும். இதுமட்டுமல்லாது, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு வராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் சில இருக்கின்றன.
தொடர்ச்சியான இறக்குமதி (continuous imports), அதிகமான உள்நாட்டு சுத்திகரிப்பு திறன், IOC, BPCL, HPCL போன்ற நிறுவனங்களின் வலுவான distribution network, சில வாரங்களுக்கு போதுமான buffer stock உள்ளிட்டவைதான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு வராமல் இருந்ததற்கு முக்கிய காரணம்.
LPG தட்டுப்பாடு ஏன்?
பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு பெரிதளவில் இல்லையென்றாலும், இந்தியாவில் LPG தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் LPGயை சேமிப்பதில் சிக்கல் இருக்கிறது. LPG ஒரு வாயு (gas) என்பதால் அதை சேமிக்க, அதிக அழுத்தம் (high pressure) மற்றும் குறைந்த வெப்பநிலை (low temperature) தேவைப்படுகிறது. மேலும், பாதுகாப்பு ரிஸ்க் அதிகம் என்பதால், இதை crude oil போல பெரிய அளவில் நீண்ட காலம் சேமிக்க முடியாது.
மேலும், இந்தியா LPG தேவையின் 50–60% வரை இறக்குமதி செய்கிறது. அதனால் சர்வதேச சந்தை, வளைகுடாநாடுகளில் இருந்து கப்பல் வருகை தாமதம், விலை மாற்றங்கள் ஆகியவை LPG விநியோகத்தை நேரடியாக பாதிக்கின்றன.
LPGஐ சேமித்து வைக்கும் storage facilities இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் அவை சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகம், bottling plants ஆகியவற்றில் குறிகிய கால தேவைக்காக மட்டுமே சேமித்து வைக்கப்படுகின்றன. ISPRL போன்ற பெரிய அளவிலான சேமிப்பு என்பது இல்லை. இதுபோன்ற காரணங்களால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.









