BREAKING

விளையாட்டு

இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றால் ரூ.25,000 ..சந்திரபாபு நாயுடு அறிவிப்பால் குஷியான ஆந்திர மக்கள்!

ஆந்திர பிரதேசத்தில் இரண்டாவது, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார். இந்த வித்யாசமான அறிவிப்பிற்கு பின்னால், ஒரு அரசியலும் ஒளிந்திருக்கிறது .

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் ‘புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை’ குறித்த வரைவுத் திட்டத்தை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அந்த கொள்கையின்படி, இரண்டாவது, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், மூன்றாவது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும், 18 வயது வரை அக்குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தவிர, குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 12 மாதங்கள் விடுமுறையும், தந்தைக்கு 2 மாதங்கள் விடுமுறையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அரசு மருத்துவமனைகளில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு PPP முறையில் IVF சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன?

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை வளர்ச்சியான, மொத்தக் கருவுறுதல் விகிதத்தை பொறுத்தது. இது 2.1 என்ற அளவில் இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அளவு சராசரியாக 1.4- 1.6 ஆக இருக்கிறது. இது புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த மாநிலங்களில் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

இந்த சிக்கலை எதிர்கொள்ளவே, ‘புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கையை’ ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்துள்ளார். மக்கள் தொகை குறித்து பேசிய அவர், “ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.5 ஆகக் குறைந்துவிட்டது இது 2.1 ஆக உயர வேண்டும் என்பது அரசின் இலக்கு. இந்த வரைவுத் திட்டம் குறித்து ஒரு மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டும். மார்ச் மாத இறுதிக்குள் கொள்கை இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணம் என்ன?

எப்போது வேண்டுமானாலும், மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடக்கலாம் என்ற நிலையில், இந்த திட்டத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில், “இரண்டு குழந்தைகளை பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்; இது மக்கள்தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்தும்,” என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்த நிலையில், இப்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Posts