BREAKING

லைஃப் ஸ்டைல்

அதிகரிக்கும் வினோத கிட்னி கோளாறு.. திணறும் மருத்துவர்கள்!

இளம் வயதினரை பாதிக்கும் வினோத கிட்னி கோளாறு சமீப காலத்தில் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பொது மருத்துவமனை மற்றும் அப்பலோ மருத்துவமனை இணைந்து கிட்னி தொடர்பான ஆய்வு நடத்தின. அந்த ஆய்வில், சக்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் எதுவும் இல்லாத போதும் Chronic Kidney Disease of unknown etiology (CKDu) எனப்படும் பின்னணி தெரியாத நாள்பட்ட சிறுநீரக நோய் பலருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களில் விவசாயம் செய்யும் பலருக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருந்துவந்த நிலையில், அது இப்போது நகர்ப்புறங்களில் இருக்கும் இளம் வயதினருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CKDu என்ற சிறுநீரக நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வெயிலில் அதிக நேரம் நின்று வேலைசெய்பவர்களுக்கு உடலில் நீரிழப்பு அடிக்கடி ஏற்படுவதால், இந்த சிறுநீரக நோய் கிரமபுரங்களில் வயல்வெளிகளில் வெளிசெய்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அதுதான் காரணமென எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், IT நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் உட்பட சிலருக்கு இந்த CKDu நோய் ஏற்பட்டிருப்பது, ஏற்கனவே நடந்துவரும் ஆய்வுகளுக்கு நேர்மாறாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல், முற்றிய நிலையிலேயே இந்த நோய் கண்டறியப்படுவதால், இந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ம், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அல்லது டியாலிசிஸ் செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது CKDu நோயின் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறதென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. உணவில் கலந்திருக்கும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உலோகங்கள், முறையற்ற மருந்துகளை உட்கொள்ளுதல், மாசடைந்த சுற்றுசூழலில் வாழ்வது போன்றவை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த CKDu நோய் வராமல் இருக்க நம்முடைய வழக்கைமுறையை ஒழுங்குபடுத்தல் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts