BREAKING

லைஃப் ஸ்டைல்

வாழ்வை எளிமையாக்கும் ஜப்பானியர்களின் கைசென் முறை…

உங்கள் நாளை சிறப்பாக துவங்க அதிகாலையில் எழவேண்டும், நம்மை மேம்படுத்திக்கொள்ள தனி பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கவேண்டும் என்று சோம்பேறிகளுக்கு கொஞ்சமும் ஒத்துவராத பல வழிமுறைகள் இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவர்களும் சுறுசுறுப்பாக தங்கள் நாளை துவங்க, தங்கள் வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஜப்பானிய கைசென் முறை உதவுகிறது.

கைசென் முறை என்றால் என்ன?

சுய முன்னேற்றத்துக்கான சுலபமான வழியாக கைசென் முறை கருதப்படுகிறது. தினமும் ஏதாவது ஒரு சிறிய மாற்றம் நம் அன்றாட பழக்க வழக்கங்களில் ஏற்பட்டால், நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க முடியும் என்பதே கைசென் முறையின் கருவாக இருக்கிறது. கைசென் என்பதற்கு “தொடர்ச்சியான முன்னேற்றம்”என்பதே பொருள்.ஒவ்வொரு நாளும், முந்தைய நாளைவிட 1% முன்னேற்றம் அடைந்தால், ஓர் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட 37% வளர்ச்சியை எட்ட முடியும். உதாரணமாக, நீங்கள் தினந்தோறும் 1 மணிநேரம் தியானம் செய்ய விரும்பினால், முதலில் 10 நிமிடம் தியானம் செய்வதிலிருந்து துவங்க வேண்டும். பிறகு தினமும் ஐந்தைந்து நிமிடங்களாக அதிகரித்துவந்தால், மனம் சோர்வடையாமல் விரைவில் 1 மணிநேரம் தியானம் செய்யமுடியும் என்று கைசென் முறை சொல்கிறது.

மனித மூளை மாற்றத்தை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டால், நம் மூளை அதை அச்சுறுத்தலாக நினைக்கின்றது. அதுவே, ஏதேனும் சிறிய மாற்றமாக நிகழ்ந்தால் அதை மூளை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. இந்த அறிவியலை அடிப்படையாக கொண்டுதான் கைசென் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தங்களுடைய உற்பத்திறனை அதிகரிக்க, முதன்முதலில் ஜப்பானிய நிறுவனமான டொயோட்டோ இந்த முறையை அறிமுகப்படுத்தியது. தங்கள் நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு இந்த முறையைக் கற்பித்து, அதில் வெற்றியும் கண்டது. குறிப்பாக மனநிலை, ஆரோக்கியம் ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாளில் கைசென் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளாக நடக்கும் சிறிய மாற்றங்களின் மூலம் வாழ்வை சிறப்பானதாக மாற்றியமைக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts