சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான Kothari Industrial Corporation Limited (KICL), 2030-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு “விஷன் 2030” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. வேளாண்மை, ட்ரோன் தொழில்நுட்பம், காலணி உற்பத்தி துறைகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய விரிவாக்கங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டது KICL. தொழில்நுட்பம், உற்பத்தி, வேளாண்மை மற்றும் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் வளர்ச்சி பாதையை தேர்வு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜின்னா ரபீக் அகமது இது தொடர்பாக கூறுகையில், “இந்தியா தொழில்நுட்பம், உற்பத்தி, உட்கட்டமைப்பு, விவசாயத்தை நவீனபடுத்துதல் ஆகியவற்றில் ஒரு புதிய யுகத்திற்குள் நுழைகிறது. இந்த வளர்ச்சி பயணத்தில் கோத்தாரி நிறுவனமும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. நமது முதலீடுகள் உறுதியான நீண்டகால மதிப்பை உருவாக்கும் வகையிலும் விவசாயிகள், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகத்திற்கு பெருமதிப்பினை உருவாக்கும் வகையிலும் அமையும்” என தெரிவித்துள்ளார்.
வேளாண்மையில் தொழில்நுட்ப புரட்சி
1962 முதல் உர உற்பத்தி மற்றும் வேளாண் உள்ளீட்டு துறையில் செயல்பட்டு வரும் KICL, திருச்சி, வேலூர் மற்றும் மதுரையில் உற்பத்தி மையங்களை கொண்டுள்ளது. தற்போது உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், வேம்பு உரங்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.
மேலும், மண் ஊட்டச்சத்து வரைபடங்கள், நில விவரங்கள், பயிர் தரவுகள் மற்றும் ட்ரோன் சேவைகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு துல்லியமான பரிந்துரைகளை வழங்கும் தொழில்நுட்ப தளத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பாரம்பரிய வேளாண் உள்ளீட்டு நிறுவனமாக இருந்து, விவசாய நுண்ணறிவு நிறுவனமாக மாறுவதே கோத்தாரி நிறுவனம் மாறி வருகிறது. மேலும் விவசாய துறையில் தங்களுடன் கைகோர்க்க அல்ஜீரியா, கத்தார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ட்ரோன் மற்றும் புவியியல் சேவைகளில் விரிவாக்கம்
KICL-இன் ட்ரோன் மற்றும் ஜியோஸ்பேஷியல் பிரிவு பல மாநிலங்களில் சாலை, உள்கட்டமைப்பு மற்றும் நில அளவீட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை காவல்துறைக்காக ட்ரோன் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கிய முன்னோடி நிறுவனம் KICL ஆகும்.
டிரோன் மூலம் விவசாயத்திற்கு மருந்து தெளிக்கும் சேவைகளையும் KICL நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. அதேசமயம், உள்நாட்டு ட்ரோன் உற்பத்தியில் முதலீடு செய்து, LiDAR ட்ரோன்கள், தனித்தியங்க கூடிய ட்ரோன் அமைப்புகள் உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து வருகிறது. டிரோன் பயிற்சி பள்ளிகளையும் நடத்தி வருகிறது.
காலணி உற்பத்தியில் உலகளாவிய இலக்கு
காலணி உற்பத்தித் துறையில் KICL வேகமாக வளர்ந்து வருகிறது. தைவானைச் சேர்ந்த Shoe Town Group உடன் இணைந்து பெரம்பலூரில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இங்கு Crocs காலணிகள் உற்பத்தி செய்ப்பட்டு வருகின்றன.
அதேசமயம் கரூரில் evervan நிறுவனத்துடன் இணைந்து ஒரு தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2026 ஜூலை முதல் Adidas நிறுவனத்திற்காக உற்பத்தியை தொடங்க உள்ளது. இந்த இரண்டு ஆலைகளும் சேர்ந்து ஆண்டுக்கு சுமார் 8 கோடி ஜோடி காலணிகளை உற்பத்தி செய்யும் திறனை பெறும் என கூறப்பட்டுள்ளது.
Kickers, Zodiz, Jeetlo பிராண்டுகளில் விரிவாக்கம்
Kickers பிராண்டுக்கான 30 ஆண்டு உரிமத்தை KICL பெற்றுள்ளது. இந்தியா உட்பட ஒன்பது நாடுகளில் இந்த பிராண்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், குறைந்த விலை காலணிகளுக்கு பெயர்போன Zodiz மற்றும் Jeetlo பிராண்டுகளையும் கோத்தாரி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. தற்போது 2,500-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும் இந்த பிராண்டுகளை 2030-க்குள் 15,000 முதல் 20,000 கடைகள் வரை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு
KICL நிறுவனம் Una Villa மற்றும் Pattukkottai Mess போன்ற ரெஸ்டாரெண்டுகளை நடத்தி வருகிறது. மேலும் மூன்று மத்திய சமையல் கூடங்கள் வழியாக தொழிற்சாலை ஊழியர்களுக்கு தரமான உணவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வசதிகள் மேலாண்மைப் பிரிவு மூலம் 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குழுமத்தின் சொந்தப் போக்குவரத்துப் பிரிவான Parveen Roadways மூலம் உற்பத்தி பொருட்களின் தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.
திறன் மேம்பாடு மற்றும் வடிவமைப்பு கல்வி
இத்தாலியின் IUAD நிறுவனத்துடன் இணைந்து உலகத் தரத்திலான காலணி வடிவமைப்பு கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்த KICL திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு DOTE மற்றும் ஐரோப்பிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து காலணி துறைக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்க உள்ளது.
2030-க்குள் இந்தியாவின் காலணி ஏற்றுமதியில் குறைந்தது 10 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் நீண்டகால இலக்கு என KICL தெரிவித்துள்ளது.









